அண்ணாமலையின் புகாருக்கு மறுப்பு தெரிவித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்

347

தமிழக சுகாதாரத்துறையின் சார்பாக கொள்முதல் செய்யப்படும் “ஹெல்த் மிக்ஸ் கிட்” திட்டத்தில் முறைகேடு நடைபற்றிருப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியிருந்தார்.

இதற்கு பதில் அளித்து இன்று அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவ பணிகள் கழகத்தின் செல்வ விநாயகம் ஆகியோர் இன்று கூட்டாக விளக்கமளித்தனர்.

மகப்பேறு மகளிருக்கான ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் திட்டத்தில் முறைகேடு என்பது ஆதாரமற்றது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் மறுப்பு தெரிவித்தார்.

“மதர்ஸ் ஹெல்த் மிக்ஸ்” என்ற ஊட்டச்சத்து பானத்திற்காக மருத்துவ பணிகள் கழகத்தின் மூலமே டெண்டர் விடப்படுகிறது என்றும் அவர் கூறினார்.

இதுவரை டெண்டர் இறுதியாக வில்லை என்றும் அமைச்சர். ம.சுப்பிரமணியன் விளக்கம் அளித்தார்.