நீட் விலக்கு மசசோதா குறித்த மத்திய அரசின் 6 கேள்விகளுக்கும், தமிழ அரசு சட்டப்பூர்வமாக பதில் தயாரித்துள்ளது – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

34

நீட் விலக்கு மசசோதா குறித்த மத்திய அரசின் 6 கேள்விகளுக்கும், தமிழ அரசு சட்டப்பூர்வமாக பதில் தயாரித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

நீட் விலக்கு மசோதா குறித்து தமிழக அரசிடம் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் மற்றும் சட்ட அமைச்சகம் சில சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இதுகுறித்து சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவ கல்வி இயக்குநரகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், நீட் விலக்கு மசோதா மாநில அரசின் அதிகார வரம்பை மீறியதாக உள்ளதா? என மத்திய சட்ட அமைச்சகம் கேள்வி எழுப்பியுள்ளதாகக் கூறினார். இந்த மசோதாவை நிறைவேற்ற போதுமான அதிகாரம் தமிழக அரசுக்கு உள்ளதாக ஆதாரப்பூர்வமாக எடுத்து கூறி, மத்திய அமைச்சகத்தின் கேள்வி அடிப்படையில்லாதது என பதிலளித்திருப்பதாக அவர் தெரிவித்தார். மத்திய அரசின் 6 கேள்விகளுக்கும் சட்டபூர்வமாக தமிழக அரசு பதில் தயாரித்து உள்ளதாவும், அதனை ஒரு சில நாட்களில் மத்திய அரசுக்கு அனுப்பி, நீட் விலக்கு மசோதாவை குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்ப வலியுறுத்த உள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Advertisement


இதைதொடர்ந்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் துணை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி வழங்கப்பட உள்ளதாகவும், 16ஆம் தேதி முதல் கலந்தாய்வு நடைபெறும் என்றும் தெரிவித்தார். மருந்தாளுனர், நர்சிங் உள்ளிட்ட துணை மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்களை ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் 10ஆம் தேதி வரை ஆன்லைன் மூலமாகவும், மருத்துவக் கல்லூரிகளில் நேரடியாகவும் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. www. tnmedicalselection.net என்ற இணையதளம் மூலமாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.