எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கு, இது பற்றி பேச வேண்டுமா.? – ஜெயக்குமார்

jayakumar
Advertisement

கொடநாடு வழக்கில் அதிமுகவுக்கு பயமில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை பட்டினம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எவ்வளவோ பிரச்சனைகள் உள்ளபோது, கொடநாடு விவகாரத்தை சட்டப்பேரவையில் பேச வேண்டுமா என்று கேள்வி எழுப்பினார்.

சட்டப்பேரவையில் கொடநாடு விவகாரம் குறித்து விவாதிப்பது மரப்புக்கும், மாண்புக்கும் எந்த வகையில் உட்பட்டது என்றும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது, சட்டப்பேரவையில் எப்படி விவாதிக்க முடியும் எனவும் தெரிவித்தார்.

அதிமுகவுக்கு சங்கடம் கொடுக்கவே சட்டப்பேரவையை பயன்படுத்துகிறார்கள் என்று கூறிய ஜெயக்குமார்,
கொடநாடு விவகாரத்தில் அதிமுகவுக்கு மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை என தெரிவித்தார்.

Advertisement