விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மினி மாரத்தான் போட்டி

53

நாகர்கோவிலில் இருதயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. உலக இருதய தினத்தை முன்னிட்டு குமரி மாவட்டம் நாகர்கோவிலில், இருதயம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. உடற் பயிற்சிகள் மூலம் மாரடைப்பு உள்ளிட்ட இருதய நோய்களை தடுக்கலாம் என்ற நோக்கில், மினி மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.

மாவட்ட விளையாட்டு அதிகாரி டேனியல், மினி மாரத்தானை தொடங்கி வைத்தார். இதில், நெல்லை, தேனி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் உலக இருதய தினத்தன்று மினி மாரத்தான் போட்டி நடத்தப்படும் என்று இருதய நோய் மருத்துவ நிபுணர் டாக்டர் கால்வின் தெரிவித்தார்.