பாரம் தாங்காமல் இடிந்து விழுந்த புதிய பாலம்

314

மெக்சிகோ நாட்டின் மொரிலொஸ் மாகாணம் ஹர்வவசா நகரில் மரக்கட்டை மற்றும் இரும்புகளால் புதிதாக நடைமேடை மேம்பாலம் அமைக்கப்பட்டது.

இந்த புதிய நடைமேடை மேம்பாலம் அந்நகர மேயரால் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.

இந்த திறப்பு விழாவுக்கு பின் அந்த பாலத்தில் மேயர், அவரது மனைவி மற்றும் பொதுமக்கள் புதிய மேம்பாலத்தில் நடந்து சென்றனர்.

Advertisement

அப்போது, பாரம் தாங்காமல் புதிதாக கட்டப்பட்ட பாலம் திடீரென இடிந்து விழுந்தது.

இதில், மேம்பாலத்தின் மேல் நடந்து சென்றுகொண்டிருந்த நகர மேயர் ஜோஸ் லுயிஸ் யுரியோசெட்யு உள்பட பலர் 10 அடி பள்ளத்தில் விழுந்தனர்.

அளவுக்கு அதிகமான பாரம் இருந்ததால் எடை தாக்காமல் நடைமேடை பாலம் இடிந்து விழுந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.