முதலமைச்சர் இல்லம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

cm-home
Advertisement

மேகாலயாவில் அடுத்தடுத்து நிகழ்ந்து வரும் குண்டுவெடிப்பு தொடர்பாக தலைநகர் ஷில்லாங்கில் கடந்த 13-ஆம் தேதி போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது முன்னாள் பயங்கரவாதியான செரிஸ் டர்பீல்டு தாங்கியூ சுட்டுக்கொல்லப்பட்டதால், தலைநகரில் பயங்கர வன்முறை வெடித்தது.

இதனால் தலைநகரை ஒட்டியுள்ள 4 மாவட்டங்களில் ஊரடங்கும் அமல்படுத்தும் நிலைக்கு சென்றுள்ளது.

இதற்கிடையே, மேகாலய முதலமைச்சர் இல்லத்தின் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன.

Advertisement

நேற்றிரவு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசி சென்றது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.

முன்னதாக ஷில்லாங்கில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதோடு, இணைய சேவையும் முடக்கப்பட்டுள்ளது.