கோவிட் வைரஸை கொல்லும் மாஸ்க்

355
Advertisement

கொரோனா தொற்று எண்ணிக்கை ஏறுவதும் இறங்குவதுமாக இருக்கும் தற்போதைய சூழலில், தொடர்ந்து கோவிட் பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிப்பது அவசியமாகிறது.

மாஸ்க்கிலும் பல வகைகள் வந்துவிட்ட நிலையில், துணி மாஸ்குகளை விட surgical மாஸ்க் மற்றும் N-95 மாஸ்குகள் அதிக பாதுகாப்பு அளிப்பவையாக கருதப்படுகிறது.

அமெரிக்காவை சேர்ந்த ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று தயாரித்துள்ள N-95 மாஸ்க் வைரஸை தடுப்பது மட்டுமின்றி, கொல்லவும் செய்யுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

பாலிப்ரொபிலின் என்னும் ரசாயண filterகளை பயன்படுத்துவதால், மாஸ்க்கில் படும் கிருமிகள் உடைக்கப்பட்டு அழிக்கப்படுவதாக கூறும் விஞ்ஞானிகள், கோவிட் வைரஸ் பிரச்சினை முடிந்து விட்டாலும் கூட, இந்த கண்டுபிடிப்பு காற்று வழியாக பரவும் பல வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களிடம் இருந்து மக்களை பாதுகாக்கும் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.