“பள்ளி – கல்லூரிகளில் அனைவரும் முகக்கவசம் அணியவேண்டும்”

141

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பள்ளி – கல்லூரிகளில் அனைவரும் முகக்கவசம் அணியவேண்டும் எனறு கல்வி நிறுவனங்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால், சென்னை மாநகராட்சி சார்பாக அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.

அதில், பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் மாணவர்கள் முகக்கவசம் அணியவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு காய்ச்சல், இருமல் இருந்தால் உடனடியாக RTPCR -பரிசோதனை நடத்தவேண்டும் என்றும் கல்வி நிறுவனங்களுக்கு சென்னை மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.