காயம் காரணமாக பாதியில் விலகிய இந்திய வீராங்கனை மேரிகோம்

2238

காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காமில் ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதத்தில் நடக்கிறது.

இந்த போட்டிக்கான இந்திய பெண்கள் குத்துச்சண்டை அணியை தேர்வு செய்வதற்கான தகுதி சுற்று போட்டி டெல்லியில் நடந்து வருகிறது.

இதில் நேற்று நடந்த 48 கிலோ எடைப்பிரிவின் அரைஇறுதியில் 6 முறை உலக சாம்பியனான மேரி கோம், அரியானாவின் நிதுவை சந்தித்தார்.

அப்போது தாக்க முயன்ற போது மேரிகோம் தடுமாறி விழுந்தார்.

இதில் அவருக்கு இடது கால்முட்டியில் காயம் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து போட்டியை நடுவர் நிறுத்தினார்.

உடனடியாக மேரிகோம் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

இந்நிலையில் காயம் காரணமாக காமன்வெல்த் போட்டியில் இருந்து மேரிகோம் விலகியுள்ளார்.