ஆட்டத்திற்கு முன் ஆடையை மாற்ற சொன்னது ஏன்? – மேரி கோம் கேள்வி

697
mary kom
Advertisement

இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் ஒலிம்பிக்கில் தோல்வியடைந்தது ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஜப்பானின் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைப்பெற்று வருகின்றன. மகளிருக்கான குத்துச்சண்டைப் போட்டியில் 51 கிலோ எடைப் பிரிவில் காலிறுதிக்கு முந்தையச் சுற்று வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் இந்திய வீராங்கனை மேரி கோமும் கொலம்பிய வீராங்கனை இன்கிரிட் வெலன்சியாவும் மோதினர். இதில் 2 -3 என்ற கணக்கில் இந்தியாவின் மேரி கோம் தோல்வியடைந்தார். இதனால் மகளிர் பிரிவு குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவுக்கான பதக்க வாய்ப்பு பறிபோனது.

Advertisement

இந்த நிலையில் குத்துச்சண்டைப் போட்டியில் தோல்வி அடைந்ததை நம்ப முடியவில்லை என்று மேரி கோம் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் இன்கிரிட் வெலன்சியாவை இரண்டு முறை வென்றிருப்பதாகவும் அவரை இந்தப் போட்டியில் வெற்றியாளராக அறிவிப்பார்கள் என்று நினைத்துக்கூடப் பார்க்கவில்லை என்றும் மேரிகோம் வருத்தம் தெரிவித்துள்ளார்.

மேலும், ”காலிறுதியின் முந்தைய சுற்றில் நுழைவதற்கு முன்னர், நான் அணிந்திருந்த ஆடைக்கு பதிலாக வேறு ஆடையை அணியும்படி கூறினார்கள். இது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏன் அவ்வாறு கூறினார்கள் என்பது குறித்து விளக்கம் வேண்டும்” என்றும் மோரி கோம் கூறியுள்ளார்.

மேரி கோமின் இந்த கருத்தால், ஒலிம்பிக்கில் மேட்ச் பிக்சிங் நடந்துள்ளதா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.