தோசை  கல்லில் அடி வாங்கி ஓட்டம் பிடித்த “முதலை”

36
Advertisement

ஆஸ்திரியாவின் கிராமப்புறங்களில் விலங்குகள் மனிதர்கள் வசிக்கும் பகுதிக்கு வருவது , காடுசார்த்த பகுதிகளில் வசிக்கும் மக்களை தாக்குவது போன்ற சம்பவங்கள் நிகழ்வது வாடிக்கையான ஒன்று.

இந்நிலையில் , பார்  உரிமையாளர் ஒருவர் அவரின் பாரின் பின்புறத்தில்  வேலையை கவனித்துக்கொண்டு இருந்துள்ளார்.எதிர்பாராதவிதம் அருகே காட்டில் இருந்து முதலை ஒன்று ஆக்ரோஷமாக இவரை தாக்க வந்துள்ளது.

டக்கென்று “வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்” என்பது போல ,அவர் கையில் வைத்திருந்த தோசை  கல்லை  வைத்து,முதலையை  நேருக்கு நேராக எதிர்கொண்டார்.ஒருகட்டத்தில் இவரை தாக்க ஆக்ரோஷமாக ஓடிவந்த அந்த முதலையின் தலையிலையே இரண்டு முறை தோசை கல்லை வைத்து அடிக்க , வந்த வேகத்தில் அந்த முதலை மீண்டும் காட்டிற்குள் சென்றுவிட்டது.

Advertisement

இணையத்தில் இந்த வீடியோ வைரலாகி. தோசை  கல்லை வைத்து முதலையை ஓடவிட்ட இவரை நெட்டிசன்கள் பாராட்டிவருகின்றனர்.