இணையத்தில் தீயாய் பரவும் ஒரு நபரின்  ஐந்து வினாடி செயல் !

38
Advertisement

உலகில் ஏதோ ஒரு மூலையில், நாம் நம்பமுடியாத சாகசங்களை  செய்து வருகின்றனர் மனிதர்கள்.இந்நிலையில், ஆண் ஒருவர் ஐந்து வினாடிகளில் செய்த சாகசம் நெட்டிசன்களை உறைய வைத்துள்ளது.

ட்விட்டரில் பகிர்ந்த இந்த வீடியோவில், கார் ஒன்றை  கற்களின் உதவியுடன் , ஒரு  கார் செல்லும் அளவு மட்டும் தரையிலிருந்து இடைவெளி விட்டு மேலே தூக்கி நிறுத்தியுள்ளனர்.பின், மற்றொரு காரின் மேல் அந்த ஆண்  தர்மாகோல் போன்ற அட்டையின் மேல் படுத்துக்கொண்டு இருக்க, அந்த கார்  மின்னல் வேகத்தில் தொலைவிலிருந்து கல்லின்மேல் நிற்கவைத்துள்ள காரின் அடியில் நுழைந்து செல்கிறது.

Advertisement

கண்ணிமைக்கும் நேரத்தில் ,மேலே இருக்கும் காரில் உள்ளே புகுந்து மற்றொரு புறம் வெளியே வீசப்பட்டு மீண்டும் தன்னை இழுத்து வந்த காரின் மேல் விழுந்து விடுகிறார் அந்த நபர். பார்ப்பவர்களை உறையவைக்கும் விதம் இருக்கும் இந்த சாகசம்  இணையத்தில் வைரலாகி வருகிறது