தீப்பற்றி எரிந்த வீட்டிலிருந்து 4 குழந்தைகளை காப்பாற்றிய ஆண் – உடல் எறிந்த நிலையில் வீரச்செயல்

36
Advertisement

அமெரிக்காவில் கடந்த 11 ஆம் தேதி நள்ளிரவு வீடு ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.இதனை அவ்வழியாக காரில் சென்ற நிக்கோல்ஸ் போஸ்டிக் என்பவர் பார்த்து பதறிபோனார்.காரணம் அந்த நேரத்தில் அங்கு உதவிக்கு கூப்பிட யாரும் இல்லை.தீயணைப்பு துறைக்கு போன் செய்யவும் நேரம் இல்லை என நினைத்தார் நிக்கோல்ஸ்.

உடனே,ஒரு நொடி கூட தாமதிக்காமல் அந்த வீட்டின் பின்புறம் சென்று அங்கிருந்த ஜன்னல் ஒன்றை உடைத்து வீட்டின் உள்ளே நுழைந்து பார்த்துள்ளார்.வீட்டின் அறை ஒன்றின் ஒரு வயது முதல் 18 வயது வரையலான 4 குழந்தைகள் உறங்குகொண்டு இருந்ததை கண்டு, உடனே அவர்களை வெளியே மீட்டு கொண்டுவர முயற்சித்துள்ளார்.

ஒருபுறம் வீடு முழுவதும் பரவிய தீ கடுமையாக எரிந்துகொண்டு இருக்கிறது.மற்றொரு புறம் நான்கு பேரையும் பத்திரமாக வெளியே கொண்டு  வரணும் என்ற மிகப்பெரிய சவால் இருந்தது.பின் தீயில் கடுமையான காயங்களுடன்  அந்த குழந்தைகளை மீட்டார் நிக்கோல்ஸ்.இதற்கிடையில் தகவல் கிடைத்து தீயணைப்பு மற்றும் காவல்துறை அங்கு வந்து மோசமாக காயமடைந்த நிக்கோல்ஸ் மற்றும் வீட்டிலிருந்து மீட்கப்பட்ட குழந்தைகளை மருத்துமனைக்கு அழைத்துச்சென்றனர்.

Advertisement

நிக்கோல்ஸ் தன் உயிரை துச்சமாக எண்ணி , நான்கு குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய வீடியோவை பகிர்ந்து பாராட்டியுள்ளது அந்நகர காவல்துறை.இந்த சம்பவத்தையடுத்து பல லட்சக்கணக்கான இதயங்களில் இடம்பிடித்தார் நிக்கோல்ஸ்.