இது எல்லாம் ரொம்போ ஓவர் ஆமா..!

33
Advertisement

இது எல்லாம் ரொம்போ ஓவர் ஆமா..! என்று சொல்லவைக்கும் சம்பவம் ஒன்று இணையத்தில் வைராக்கி வருகிறது.வாழ்வில் சுவாரசியமான தருணங்கள் எப்போது வேண்டுமானாலும் வரும்.இது போன்று நபர் ஒருவர் தனக்கு நடந்த அனுபவத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த கபில் வாஸ்னிக்,இணையச்செயலி மூலம் பிரபல பேக்கரியில் கேக் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார்.அத்துடன்,தான் ஆர்டர் செய்த கேக் முட்டை கலந்ததா ? முட்டை கலக்காததா ? என தெரிந்துகொள்ளவேண்டும் என ஆர்டர் உடன் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் ஆர்டர் செய்த கேக் வந்துள்ளது.சாக்லேட் கேக் போல இருக்கும் அந்த கேக்யை பார்த்து ஒரு நிமிடம் குழம்பிபோனார் கபில் வாஸ்னிக்.காரணத்தை அவரே இணையத்தில் பகிர்ந்துள்ளார்.அவருக்கு அனுப்பட்ட கேக் மீது அவர் கேட்ருருந்த கேள்விக்கு பதில் எழுதியுள்ளது அந்த பேக்கரி.

Advertisement

கேக்கின் மீது CONTAIN EGG என கிரீம் மூலம் எழுதப்பட்டு உள்ளது.அதாவது அவருக்கு, இந்த கேக் முட்டை கலந்தது என பதில் தெரிவித்து உள்ளது அந்த பேக்கரி.இந்த புகைப்படத்தை பார்த்து பலரும் தங்களின் வேடிக்கையான கமெண்ட்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.