கணிதத்தில் மகன் நூற்றுக்கு ” “06”  மார்க்-  கதறி அழும் தந்தை

245
Advertisement

கணித பாடத்தை பலரும்  சவாலான ஒன்றாக பார்க்கிறார்கள்.மற்ற பாடங்களை காட்டிலும்  கணிதம் கடினமாக உள்ளது என பல மாணவர்கள் கூறுவதை கேட்டிருப்போம், இதற்காகவே டியூஷன் செல்லும் மாணவர்களும் உண்டு.

இந்த பிரச்சனை இந்தியாவில் மட்டும் அல்ல, பல உலக நாடுகளிலும்  இந்த பிரச்சனை உள்ளது.இந்நிலையில் , சீனாவில் நடந்த சம்பவம்  ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.சீனாவின் ஹெனான் மாகாணத்தில் தந்தை ஒருவர் தன் மகனுக்கு ஒரு வருடமாக கணிதம் கற்றுக்கொடுத்துள்ளார்.

மகனுக்கு கணிதம் கடினமாக இருப்பதால் தினம் பள்ளி  முடிந்து வந்தபின், இரவு வரை வீட்டில் கணிதம் கற்றுக்கொடுத்துள்ளார்.ஒருகட்டத்தில் தேர்வும் நிறைவடைந்தது.சில தினங்கள் கழித்து முடிவுகள் வெளியாகி உள்ளது.

கணித தேர்வில்  அவரின் மகன் 100க்கு 6 மதிப்பெண் மட்டுமே  எடுத்துள்ளான் இதை அறிந்து அந்த தந்தை கண்ணீர் விட்டி கதறி அழுதுள்ளார்.ஒரு வருடமாக சொல்லித்தந்து வெறும் 6 மதிப்பெண் மட்டுமே எடுத்ததால், அனைத்தும் வீணாகி விட்டது என தன் அதிருப்தியை அழுகை மூலம் வெளிப்படுத்திக்கிறார்.அவர் அழுகும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.