‘4 லிட்டர்’ பாலை திருடியதாக இளைஞர் கைது

44
Advertisement

நான்கு அமுல் பால் பாக்கெட்டை திருடியதாக  இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது. கைது செய்யப்பட்டது தெற்கு டெல்லியின் கல்காஜி பகுதியில் நவ்ஜீவன் முகாமில் வசிக்கும்  26 வயதான ராம் குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கடந்த சனிக்கிழமை , ராம் குமார் பாலகம் ஒன்றில் ,  4 கிலோ பாலை (4 பாக்கெட் அமுல் பால்)  கடைக்காரருக்கு தெரியாமல் திருடியதாக சொல்லப்படுகிறது.

கடைக்காரர்  ராஜீவ் குமார், ராம் குமார்  திருடுவதைப் பார்த்து கையும் களவுமாகப் பிடித்து காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். சம்பவஇடத்துக்கு வந்த காவல்துறை, கடைக்காரர் அளித்த புகாரின் பேரில் ராம் குமாரை கைது செய்து அழைத்து சென்றனர்.

Advertisement

கடைக்காரர் ராஜீவ் குமார் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்ததன் அடிப்படையில் உள்ளூர் காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ,குற்றம்சாட்டப்பட்ட ராம் குமார் சாகேத் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறையின் தகவலின்படி ,கைது செய்யப்பட்டுள்ள ராம்  குமார் மீது இதெற்கு முன் ,  குற்றப் பதிவுகள் எதுவும் இல்லை என தெரியவந்துள்ளது.