சரமாரி கேள்விகளை கேட்டு வெளுத்து வாங்கிய மம்தா பானர்ஜி

703

மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகக் குழுக் கூட்டத்தில், நிர்வாகிகளை கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி சரமாரி கேள்விகளை கேட்டு வெளுத்து வாங்கினார்.

மேற்கு வங்க மாநிலம் புரூலியாவில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் மாநிலத்தின் முதல்வரும், அக்கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி கலந்து கொண்டார்.

அப்போது கட்சி நிர்வாகிகளை கேள்வி கேட்டு வறுத்தெடுத்தார்.

இதனிடையே நிர்வாகி ஒருவரை பார்த்து, உங்களுடைய தொப்பை ஏன் பெரிதாக உள்ளது என்றும், உடற்பயிற்சி செய்வதில்லையா எனவும் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பினார்.

இதற்கு தனக்கு எந்த நோயும் இல்லை என அந்த நிர்வாகி பதிலளித்தார்.

காரசாரமாக சென்று கொண்டிருந்த கூட்டத்தில் மம்தாவின் கேள்வியால் கலகலப்பானது.