பா.ஜ.க.வை தோற்கடிக்க அனைவரும் ஒன்றிணைவது அவசியம் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
டெல்லிக்கு 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மம்தா பானர்ஜி, நேற்று முன்தினம் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
அதைதொடர்ந்து நேற்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசினார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, பா.ஜ.க. வலிமையான கட்சியாக உள்ளதால், எதிர்க்கட்சிகளும் வலிமையாக அமைந்தால் வரலாறு படைக்கலாம் என்று தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவது தொடர்பாக விரைவில் நல்ல முடிவு எட்டப்படலாம் என்று மம்தா பானரஜி நம்பிக்கை தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகள் தனித்தனியாக நின்றால் பாஜகவை வீழ்த்த முடியாது என்று தெரிவித்த அவர், பெகாசஸ் விவகாரத்தில் மத்திய அரசு பதில் அளிக்க தயங்குவது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.