இந்திய காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக பதவியேற்க உள்ளார் மல்லிகார்ஜூன கார்கே

60

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக மல்லிகார்ஜூன கார்கே இன்று பதவியேற்க உள்ளார்.

காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல், 22 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 17ஆம் தேதி நடைபெற்றது. இதில், மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜூனா கார்கே, சசிதரூர் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் மல்லிகார்ஜூன கார்கே பெரும்பான்மை ஓட்டுகளை பெற்று வெற்றி பெற்றார். இதைதொடர்ந்து. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக மல்லிகார்ஜூன கார்கே இன்று பதவியேற்க உள்ளார்.

இந்த நிகழ்ச்சியில், சோனியா காந்தி, ராகுல் காந்தி, ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல், காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மாநிலத் தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். இதன் மூலம், 24 ஆண்டுகளுக்குப் பிறகு காந்தி குடும்பத்தை சேராத ஒருவர் காங்கிரஸ் தலைவராக பதவியேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement