தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

90

28 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மாநகராட்சியில் பணியாற்றும் 3 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் மற்றும் 500க்கும் மேற்பட்ட பொறியியல் பிரிவு பணியாளர்கள் கடந்த 2 நாட்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் மாநகராட்சியில் அகற்றப்பட வேண்டிய ஆயிரத்து 500 டன் குப்பைகள் தேக்கமடைந்து பிரதான சாலைகள் முழுவதும் குப்பைகள் நிறைந்து காணப்பட்டது.

மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் முன்னிலையில் நேற்று நடைபெற்ற 5ஆம் கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

Advertisement

மாநகராட்சி நிர்வாகம் கோரிக்கை நிறைவேற்றுவது தொடர்பாக எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் அளித்துள்ள நிலையில், மக்களின் நலன் கருதி போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.