மதுரை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் இன்று 2வது நாளாக வேலை நிறுத்தம்

249

மதுரை மாநகராட்சியில் பணியாற்றும் 4 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள், ஒப்பந்த பணி முறையை கைவிட வேண்டும் என்பது உள்பட 28 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, நேற்று போராட்டம் தொடங்கினர்.

இதனால், மதுரை மாநகர் பகுதிகளில் சுமார் 350 டன் குப்பைகள் தேக்கம் அடைந்தன.

இதனையடுத்து, மதுரை மாநகராட்சி ஆணையருடன், தொழிற்சங்க பிரதிநிதிகள் நடத்திய 4-வது கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இதனால், தூய்மை பணியாளர்கள் இன்று இரண்டாவது நாளான வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வேலை நிறுத்த போராட்டம் தொடரும் என்று அவர்கள் அறிவித்துள்ளனர்.