சிறை கைதிகளுக்கு செல்போன் கஞ்சா சப்ளை 2 போலீசார் டிஸ்மிஸ்

226
Advertisement

மதுரை மத்திய சிறையில் ஏராளமான கைதிகள் குற்ற வழக்குகளில் தண்டணை பெற்று சிறையில் உள்ளனர் . இந்நிலையில் கைதிகள் சிலருக்கு தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா, புகையிலை போன்ற போதை பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதாக புகார் எழுந்தது.

இதனை தொடர்ந்து, சில நாட்களுக்கு முன் சிறை வளாகம் முழுவதும் சிறைத்துறை போலீஸ் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுப்பட்டனர் . அதில் சிறைக்காவலர்கள் விஷ்ணுகுமார் மற்றும் செந்தில்குமார் ஆகிய இருவரும் 7 கைதிகளுக்கு, கஞ்சா மற்றும் செல்போன் வழங்கி உதவிவந்தது தெரிய வந்தது.

உடனடியாக அந்த இரு சிறைக்காவலர்களையும் சஸ்பெண்ட் செய்தது சிறைத்துறை போலீஸ்.அதன்பின், நடந்த விசாரணையில், கடந்த 5 மாதங்களாக சட்டவிரோதமாக அவர்களுக்கு போதை பொருட்கள் மற்றும் செல்போன் வழங்கி வந்துள்ளனர்.இந்த விசாரணைக்கு பின், ஏற்கெனவே சஸ்பெண்ட் செய்யப்பட சிறைக்காவலர்கள் விஷ்ணுகுமார் மற்றும் செந்தில்குமாரை தற்போது பணிநீக்கம் செய்து சிறைத்துறை போலீஸ் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.