மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் இந்த ஆண்டு இறுதியில் தொடங்கி, 2028ஆம் ஆண்டு இறுதியில் முடிவடையும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்…

22
Advertisement

சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில், மின்காந்த அதிர்வலை சிறுநீரக கல் நீக்க சிகிச்சை மையத்தை, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு 125 கோடி மதிப்பில் புதிய கட்டிடம் கட்டும் பணி விரைவில் தொடங்க உள்ளதாக தெரிவித்தார். கருணாநிதி நூற்றாண்டு பன்னோக்கு  மருத்துவமனை திறப்பு விழாவில் பங்கேற்க, ஆளுநரை சந்தித்து அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது மற்ற விவாரங்கள் குறித்து எதுவும் பேசவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்தார்.