பல குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபர் மர்மமான முறையில் அடித்துக் கொலை

296

வடமதுரை சித்தூர் குளத்தில் ஆண் சடலம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத சோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் பெரும்பாறை பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து என்பதும், அவர் மீது15க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதும்  தெரியவந்தது.

இதேபோல், சின்னாளபட்டி அருகே தந்தையே மகனை கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலக்கோட்டை பகுதியில் வசித்து வரும் மோகன்ராஜ் என்பவர், தனது மகன் குணாவை கட்டையால் சரமாரியாக அடித்து கொலை செய்துள்ளார்.

மேலும், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மகனை கொன்ற தந்தையை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.