மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே மேலவாசல் பகுதியில் கோவில் திருவிழாவுக்காக பந்தல்கள் அமைக்கப்பட்டு இருந்தது.
அப்போது, இளைஞர்கள் சிலர் பட்டாசு வெடித்ததில் அதில் இருந்து வந்த தீ பட்டு பந்தல் பற்றி எரிந்தது.
மேலும், அங்கிருந்த வாகனங்களும் எரிந்து நாசமானது.
அருகில் இருந்த பழைய இரும்பு பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளும் தீக்கிரையானது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் விரைந்து பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த தீ விபத்து தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.