மதுரை மாநகராட்சியின் 100 வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இடியும் தருவாயில் உள்ள கட்டடங்கள் அகற்றப்படாமல் உள்ளது.
இதனையடுத்து, மதுரை மாநகராட்சியின்100 வார்டுகளிலும் பழமை வாய்ந்த வீடுகள், வணிக கட்டடங்கள் உள்ளிட்டவை கணக்கெடுக்கப்பட்டு 571 கட்டடங்களின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு அனுப்பப்பட்டுள்ளது.
பழமைவாய்ந்த கட்டடத்தை அப்புறப்படுத்த தவறும்பட்சத்தில் அக்கட்டடத்தை மாநகராட்சியால் அப்புறப்படுத்தி அதற்குரிய கட்டணத்தை அபராதத்துடன் உரிமையாளர்களிடம் வசூல் செய்யப்படும் என மாநகராட்சி சார்பில் எச்சரிக்கை விடுத்துள்ளது.