கலாஷேத்ரா வளாகத்தில் உள்ள மயானத்துக்குச் செல்லும் பொதுப் பாதையில் சாலை அமைப்பதைத் தடுக்கும் வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை திருவான்மியூரில், மத்திய கலாச்சார துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் கலாஷேத்ரா அறக்கட்டளைக்கு தமிழக அரசு ஒதுக்கிய நிலத்தின் வழியாக மயானத்துக்கு செல்லும் பாதை அமைந்திருந்தது.
கலாஷேத்ரா அறக்கட்டளை கோரிக்கையை ஏற்று ஒரு ஏக்கர் 43 சென்ட் பரப்பில் அமைந்துள்ள பாதை குத்தகைக்கு வழங்கப்பட்டது, மயானத்தை வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, சென்னை மாநகராட்சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த இடம் அரசுக்கு சொந்தமானது எனவும், மக்கள் பயன்படுத்தும் மயானத்துக்கு செல்லக்கூடிய பாதை என்றும் இதை கலாஷேத்ராவுக்கு கொடுத்தால் மயானத்துக்கு 5 கிலோ மீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டும் என எதிர்ப்பு வாதிட்டார்.