சென்னை தினம் – ஜொலிக்கும் ரிப்பன் மாளிகை

ripon-building
Advertisement

சென்னை தினத்தையொட்டி, சென்னை மாநகராட்சி இயங்கி வரும் ரிப்பன் கட்டிடம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தின் தலைநகரான சென்னை தோற்றுவிக்கப்பட்ட தினமான 1639ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதியை நினைவூட்டும் வகையில், கடந்த 2004ஆம் ஆண்டு முதல் சென்னை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

மதராசபட்டினம், 1639-ல் இருந்து தற்போது வரை, பல்வேறு நிலைகளில் வளர்ச்சியடைந்து, சென்னை மாநகரமாக மாறியுள்ளது.

மெட்ராஸ் என இருந்த பெயர் 1996ம் ஆண்டு ஜூலை மாதம் 17ஆம் தேதி, சென்னை என அதிகாரப்பூர்வ பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

Advertisement

இத்தனை சிறப்புகளை கொண்ட சென்னை தினத்தை கொண்டாடும் வகையில், மாநராட்சி சார்பில், பொதுமக்கள் பயன்பெறும் வகையில், துாய்மை பணி உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

இந்நிலையில், 382வது சென்னை தினம் இன்று கொண்டாடப்படுவதை ஒட்டி, சென்னை ரிப்பன் கட்டிடம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது.