மத்திய பிரதேச ஆளுநருக்கு கொரோனா தொற்று உறுதி

142

மத்திய பிரதேச ஆளுநர் மங்குபாய் படேலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மத்தியபிரதேச ஆளுநருக்கு கடந்த 3 நாட்களாக மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. காய்ச்சல், இருமல் ஆகியவற்றாலும் அவர் அவதியடைந்து வந்த நிலையில், போபால் நகரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு , நுரையீரல் தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டு அதற்காக சிகிச்சையளிக்கப்படுகிறது. சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து அவர் உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் ஆளுநரின் பணிகள் 4 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.