முதலமைச்சர் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியம்

241

மாற்றுத்திறனாளிகளின் வாழ்வை மேம்படுத்தும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாற்றுத்திறனாளிக்களுக்கான மாநில ஆலோசனை வாரியம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த வாரியத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர் உறுப்பினர் செயலாளராகவும், பள்ளிக்கல்வித்துறை, உயர்க்கல்வித்துறை, போக்குவரத்துத்துறை உள்ளிட்ட 12 துறைகளை சேர்ந்த முதன்மை செயலாளர்கள் உறுப்பினர்களாகவும், அலுவல் சாரா உறுப்பினர்களாக 3 சட்டமன்ற உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த குழு மாற்றுத்திறனாளிகளின் சிக்கலை உடனடியாக தீர்ப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுப்பதுடன், அரசுக்கு பரிந்துரைகளை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.