வீட்டு பயன்பாட்டுக்கான LPG சிலிண்டர் விலை ரூபாய் 50 அதிகரித்தது

470
Advertisement

வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர் விலை 50 ரூபாய் அதிகரித்துள்ளது. புதிய விலை இன்று 2022, மார்ச் 22, முதல் அமலுக்கு வருகிறது. சென்னையில் வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.915.50ல் இருந்து ரூ.965.50 ஆக அதிகரித்துள்ளது.

இந்திய அரசு சிலிண்டர்களின் விலையை மாதாந்திர அடிப்படையில் திருத்தி அமைக்கிறது. சிலிண்டர்களின் விலை சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையைப் பொறுத்து மாறுபடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.