பிரம்மாண்டமாக வெளியாகும் Lord Of the Rings தொடர்

161
Advertisement

பிரபல எழுத்தாளர் J.R.R. டோல்கீன் கதைகளை தழுவி, பீட்டர் ஜாக்சன் இயக்கத்தில், 2001இல் இருந்து 2003 வரை அடுத்தடுத்து வெளிவந்த Lord Of the Rings படத்தொடர், சுவாரஸ்யமான கற்பனை, பிரபஞ்சத்தை மீட்க போராடும் சாகசக் கதைக்களம், பிரம்மாண்ட காட்சிப்படுத்தல் என உலக அளவில் ரசிகர் கூட்டத்தை பெற்றதற்கான காரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

இந்நிலையில், Lord of the rings படத்தொடருக்கு Prequel ஆக, The Lord of the Rings: The Rings of Power என்ற சீரிஸ் செப்டம்பர் 2ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது.

எட்டு episodeகளை கொண்ட முதல் சீசனுக்கு பிப்ரவரி மாதமே ஒரு டீசர் வெளியாகிய நிலையில், தற்போது வெளிவந்துள்ள ட்ரைலர் எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது. இந்த சீரிஸின் ஒரு சீசன் தயாரிக்க மட்டும் ஆன செலவு 465 மில்லியன் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement