அக்.15 – ஆம் தேதி வரை பள்ளிகளை மூட உத்தரவு

190
Advertisement

லடாக்கில் கொரோனா பரவல் காரணமாக லே மாவட்டத்தில் உள்ள பள்ளிகளை அடுத்த மாதம் 15-ஆம் தேதி வரை மூட அம்மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

லடாக் யூனியன் பிரதேசம் லே மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.

அதன்காரணமாக லே மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளையும் அடுத்த மாதம் 15-ஆம் தேதி வரை மூட அம்மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் பள்ளி விடுதியில் இருந்து வீடு திரும்பும் எல்லா மாணவர்களுக்கும் ஆர்.டி.பி.சி.ஆர். கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானாலும் ஒரு வாரம் தனிமைப்படுத்தப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.