“கண்ணீர்” விட்டு அழும் சிறுவன்- இணையத்தில் வைரல்

261
Advertisement

குழந்தைகளிடம் காணக்கூடிய அப்பாவித்தனம் – பெரும்பாலும் ஒப்பிட முடியாதது மற்றும் ஒருவரை மிகவும் உணர்ச்சிவசப்பட வைத்துவிடும்.குழந்தைகள் அவர்களுக்கு மிகவும் பிடித்த விஷயங்களை மட்டும் தான் செய்வார்கள்.

அதேசமயத்தில் அவர்கள் ஆசைப்படுவது கிடைத்துவிட்டால் ,அதை ஒரு நிமிடம் கூட  விட்டு விளக்க மாட்டார்கள்.அது பொருளாக இருக்கலாம்,ஒரு நபராக இருக்கலாம் அல்லது ஒரு உயிரனமாக  கூட இருக்கக்கூடும்.

இணையத்தில் இது போன்று குழந்தையின் வீடியோ ஒன்று இணையவாசிகளை உணர்ச்சிவசப்பட வைத்துள்ளது.இந்த வீடியோவில்,குழந்தை ஒன்றின் கை விரலின் மேல் வண்ணத்து பட்டாம்பூச்சி ஒன்று உட்காந்தபடி தன் இறக்கைகளை அசைத்துக்கொண்டு இருக்கிறது.

Advertisement

வீடியோவின் மேல், என் மூன்று வயது மகன் மகிழ்ச்சியில் கண்ணீர் சிந்திக்கொண்டு இருக்கிறான்.அவனுக்கு வண்ணத்து பட்டாம்பூச்சி மிகவும் பிடிக்கும் என எழுதப்பட்டுள்ளது.சிறுவன் தனக்கு மிகவும் பிடித்த வண்ணத்து பட்டாம்பூச்சி தன் விரலில் உட்காதுருபத்தை ரசித்தபடி கண்ணீரை தன் உடையால் துடைத்துக்கொள்கிறான்.பின் அந்த வண்ணத்து பட்டாம்பூச்சிக்கு சில முத்தங்களையும்  கொடுக்கிறான்.

.