முதல் நாள் பள்ளி முடிந்து அம்மாவை நோக்கி கண்ணீருடன் ஓடிவந்த குழந்தை

68
Advertisement

பெற்றோர்களின் மகிழ்ச்சியான தருணங்களில் ஒன்று தன் குழந்தை முதல் முறை பள்ளிக்கு செல்வதை பார்ப்பது.அது  மிகவும் உணர்ச்சிபூர்வமான ஒரு தருணம்.

சமீபத்தில் பகிரப்பட்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.அதில், இரண்டரை வயது ஆண் குழந்தை ஒன்று தன் முதல் நாள் பள்ளிக்கு சென்றுள்ளான்.குழந்தையை அழைத்துவர அவரின் தாய் பள்ளியின் வளாகத்தில் காத்துகொண்டு இருக்கிறார்.

கண்ணீருடன் குழந்தையை பள்ளிக்கு அனுப்பிவைத்த குழந்தையின் அம்மா அழைத்துச்செல்ல காத்துகொண்டு இருக்க , குழந்தையின் கையை பிடித்தபடி உள்ளே  இருந்து ஆசிரியை ஒருவர்  குழந்தையை அழைத்துவருகிறார்.

Advertisement

தூரத்திலிருந்து தன் அம்மாவை பார்த்த அந்த குழந்தை,சொர்க்கத்தையே பார்த்ததுபோல அணைத்தையும் மறந்து அம்மாவை நோக்கி ஓடிவந்து என்னை தூக்கிக்கொள்ளுங்கள் என கண்ணில் கண்ணீருடன் அனைத்துக்கொள்கிறான்.அனைவரின் வாழ்வில் கடந்து செல்லும் இந்த தருணம் பார்ப்பதற்கே உணர்ச்சிப்பூர்வமாக உள்ளது.