புகைப்பட கலைஞரின் காலுக்கடியில் நின்ற சிங்கம்-சிலிர்க்கவைக்கும் தருணம்

42
Advertisement

உலகின் அற்புதமான  படைப்புகளில்  ஒன்று காட்டு விலங்குகள். ஒவ்வொன்றுக்கும் தனி சிறப்புண்டு.அது போன்ற காட்டு விலங்குகளை,அது வாழ்கின்ற இடத்திலையே பார்த்து ரசிப்பது தான் சிறப்பு.

இதுபோன்ற விலங்குகளை காட்டிற்கே சென்று அதனை படம்பிடிப்பது பலரின் கனவு, சமீபத்தில்  புகைப்படக்  கலைஞர் ஒருவர் காட்டிற்கு சென்று சிங்கத்தை படம்பிடிக்க காத்துருந்தார் அடுத்து என்ன நடந்தது என்று நீங்களே பாருங்க.

இன்ஸ்டாவில் பகிரப்பட்ட இந்த வீடியோவில்,புகைப்பட கலைஞர் சஃபாரி ஜீப்பில்,இன்ஜினின் முன் உள்ள சீட்டில் உட்காந்து, சிங்கங்கள் வரும்போது படம்பிடித்துவிடலாம் என எதிர்பார்த்து   கவனித்துக்கொண்டு இருக்கிறார்.

Advertisement

நேரம் கடந்து செல்ல சோர்வுடன் அவரின் வலதுபுறம் எதிர்பாராமல்  திரும்ப, ஒரு நொடி இதயம் நின்றுவிடும் போல ஆகிவிடுகிறது.அது அவருக்கு மட்டும் அல்ல பார்க்கும் நமக்கும் தான்.ஆம்,அவர் இடதுபுறம் திரும்பி பார்த்துக்கொண்டு இருக்க,மற்றொரு புறம் வந்த  ஒரு சிங்கம்  அவரின் காலுக்கடியில் நின்று அவரை பாத்துக்கொண்டு இருக்கிறது.

இருவரும் மிக அருகில் ஒருவருக்கொருவர் பார்த்துக்கொள்ளும் போது, சிலர்க்கு உடம்பே சிலிர்த்துவிட்டதாக கூறுகின்றனர்.இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.