திடீர் ஆய்வில் இறங்கிய துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன்

178

அரசு மருத்துவமனைகளில், பல்வேறு குறைபாடுகள் இருப்பதாக தெரிவித்த துணைநிலை ஆளுநர் தமிழிசை, மூன்று மாதங்களுக்குள் குறைகள் நிவர்த்தி செய்யப்படும் என்று கூறினார். புகாரின்பேரில், புதுச்சேரி அரசு மருத்துவமனைகளில், துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் ஆய்வு செய்தார். சிடி ஸ்கேன், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், ஆஞ்சியோகிராம் மிஷின் உள்ளிட்டவை பழுதாகிக் கிடப்பது தொடர்பாக, மருத்துவர்களிடம் கேள்வி எழுப்பினார். ஆம்புலன்ஸ் வசதியின்றி நோயாளிகளை தள்ளுவண்டியில் கொண்டு செல்லும், நிலையை கண்டு கடிந்து கொண்டார்.

இதன் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, அரசு மருத்துவமனைகளில், ஏராளமான குறைபாடுகள் இருப்பதாக கூறினார். இந்தக் குறைபாடுகள் மூன்று மாதங்களில் நீக்கப்படும் என்றும் என்று தமிழிசை உத்தரவாதம் அளித்துள்ளார்.