குடியரசுத்தலைவர் தேர்தல் – முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதிய மேற்குவங்க முதல்வர்

243

ஒருமித்த கருத்துடைய அனைவரும் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என்று 22 எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு கடிதம் மூலம் மம்தா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குடியரசுத்தலைவர் தேர்தல் ஜூலை-18 ம்தேதி நடைபெறுகிறது.

இதையொட்டி, எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் வகையில் மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழக முதல்வர் மு.க.ஸடாலின் உள்ளிட்டோருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Advertisement

22- மாநிலங்களில் உள்ள  எதிர்க்கட்சிகளின்  தலைவர்களுக்கு, முழுமையான ஒத்துழைப்பு அளிக்குமாறு அவர் வலியுறுத்தியுள்ளார். 

வரும் 15-ம்தேதி டெல்லியில் நடைபெறும் ஆலோசனைக்கூட்டத்தில் கலந்துகொள்ள அனைத்து மாநில தலைவர்களும் வருகைபுரியுமாறு  கேட்டுக்கொண்டுள்ளார்.

ஒருமித்த கருத்து உடையவர்கள் குடியரசுத்தலைவர் தேர்தலில் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என்றும் மம்தா பானர்ஜி அந்த கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.