நாயை வேட்டையாடிய சிறுத்தை

333

நாசிக் அருகே உள்ள முங்சரே கிராமத்தில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த சிறுத்தை அங்கிருந்த வீடு ஒன்றில் நுழைந்துள்ளது.

சிறுத்தை நுழைவதை கண்ட நாய் சிறுத்தையை நோக்கி குரைத்துக்கொண்டே இருந்தது.

இதனால், முதலில் பின்வாங்கிய சிறுத்தை, திரும்பிப் பாய்ந்து வந்து நாயை கவ்விக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றது.

இந்த அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.

சிறுத்தையை ஊருக்குள் நுழைவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.