தெலுங்கானாவின் ஐதராபாத் உயர்நீதிமன்ற வளாகத்தில் 45 வயதான நாகேஸ்வர ராவ் என்ற வழக்கறிஞர் மாரடைப்பால் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாகேஸ்வர ராவ் காத்திருப்போர் அறையில் அமர்ந்திருந்தபோது திடீரென மார்பில் வலி ஏற்பட்டது. உடனே ஊழியர்கள் அவரை நாற்காலிகளில் படுக்க வைத்து முதலுதவி செய்தனர்.
இதையடுத்து உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பரிசோதனைக்குப் பிறகு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். முதற்கட்ட விசாரணையில் அவரது மரணத்திற்கு மாரடைப்புதான் காரணம் என்று தெரியவந்துள்ளது.