விரைவில் மக்கள் தொகை கட்டுப்பாடு சட்டம் கொண்டுவரப்படும்

295

மக்கள் தொகையில் சீனா முதல் இடத்திலும், இந்தியா 2வது இடத்திலும் உள்ளன.

அடுத்த சில ஆண்டுகளில் சீனவை பின்னுக்கு தள்ளி மக்கள் தொகையில், இந்தியா முதலிடத்திற்கு முன்னேறும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், சத்தீஸ்கரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மத்திய அமைச்சர் பிரகலாத் சிங் படேலிடம் மக்கள் தொகை கட்டுப்பாடு சட்டம் குறித்த செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் பிரகலாத் சிங் படேல், மக்கள் தொகை கட்டுப்பாடு சட்டம் விரைவில் கொண்டு வரப்படும் என்று தெரிவித்தார்.