கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு – பீய்ச்சியடித்த தண்ணீர்

170
water
Advertisement

மார்த்தாண்டம் அருகே குழித்துறை ஆற்றில் இருந்து கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் ராட்சத குழாய்கள் மூலம் பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.

தக்கலை அழகியமண்டபம் பகுதிகளுக்கு களியக்காவிளை -நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையோரம் பதிக்கப்பட்ட ராட்சத குழாய் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.

இந்நிலையில், சுவாமியார்மடம் அருகே சாலையோரம் உள்ள ராட்சத குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் 15-அடி உயரத்திற்கு பீச்சியடித்தபடி நீருற்று போல் வெளியேறியது.

Advertisement

குடிநீர் வீணான தகவல் கிடைத்ததும் குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் குழாயை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.