Wednesday, December 24, 2025

சுற்றுலா பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ் : குற்றால அருவியில் குளிக்க அனுமதி

குற்றாலம் பிரதான அருவியில் குளிக்க 7 நாட்களுக்குப் பிறகு தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் கடந்த வாரம் பெய்த கனமழை காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் காட்டாற்று வெள்ளம் ஆக்ரோஷமாக சீறிப்பாய்ந்தது. இதனால், அருவியில் அமைக்கப்பட்டிருந்த நடைபாதைகள், தடுப்பு கம்பிகள் ஆகியவை சேதமடைந்தன.

இதையடுத்து, பேரூராட்சி ஊழியர்கள் குற்றால அருவியில் முகாமிட்டு, சேதங்களை சரிசெய்யும் பணியை மேற்கொண்டனர். இதனால், பாதுகாப்பு கருதி குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில், 7 நாட்களுக்குப் பிறகு தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Related News

Latest News