பாதுகாப்பு வேண்டும் – செவிலியர்கள் போராட்டம்

39

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அரசு தலைமை மருத்துவமனையில் பணியாற்றி வரும் செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் தங்களுக்கு பணியின்போது பாதுகாப்பு வேண்டும் என்று கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

ஓசூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிலர் செவிலியர்களை தாக்குவதும், அங்குள்ள பாதுகாவலர்களிடம் இருந்து செல்போனை பிடுங்கி செல்வது போன்ற சம்பவங்கள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்ததாக தெரிகிறது.

இதனால், பணியின்போது உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி  செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள், மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement