கொல்லிமலையை திருப்பிப்போட்ட மழை

53

கனமழை காரணமாக வறட்டாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில்,கொல்லிமலைக்கு செல்லும் தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் 5 கிராமங்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தின் குட்டிக்கரடு, மாவாறு, கொல்லிமலை அடிவாரம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அதன்காரணமாக தம்மம்பட்டி அருகே உள்ள வறட்டாற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், கொல்லிமலைக்கு செல்லும் தற்காலிக தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.

இதனால் முள்ளுக்குறிச்சி, மாவாறு, குட்டிக்கரடு, பள்ளிப்பாறை, கொல்லிமலை உள்ளிட்ட 5 கிராமங்களுக்கு செல்லும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. அதன்காரணமாக அப்பகுதிமக்களும், வாகன ஓட்டிகளும் சிரமம் அடைந்துள்ளனர். மேலும் 8 கிலோ மீட்டர் தூரம் சுற்றிச்செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.