அரசு பேருந்தும் சுற்றுலாப் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து

398

கொல்லம் ஊரகப் பகுதியில் உள்ள சித்தாரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குளத்துப்புழா-மடத்தாரா சாலையில் அரசுப் பேருந்தும், சுற்றுலாப் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது.

இந்த விபத்தில் 57 பேர் காயமடைந்தனர்.

இதில் 42 பேர் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரியிலும், 15 பேர் கடக்கலில் உள்ள மருத்துவமனையிலும்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே  திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களை அமைச்சர் வீணா ஜார்ஜ் நேரில் சென்று சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காயமடைந்தவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகத் கூறினார்.