ஐ.பி.எல் புதிய கேப்டன்களோடு இன்று களமிறங்கும் கொல்கத்தா,சென்னை அணிகள்

300
Advertisement

பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட 2022 ஐபிஎல் தொடர் இன்று மாலை தொடங்க உள்ளது. இந்தாண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் -கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோத உள்ளன. இம்முறை 8 அணிகளுடன் கூடுதலாக 2 அணிகள் என மொத்தம் 10 அணிகள் பங்கேற்க இருப்பதால், மொத்தம் 70 லீக் போட்டிகள் நடைபெற உள்ளது. அதனையடுத்து, ஐபிஎல் தொடரில் பங்கேற்க இருக்கும் அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் 14 லீக் போட்டிகளில் விளையாடும். மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கும் முதல் போட்டியில், புதிய கேப்டன்கள் தலைமையில் இரு அணிகளும் களமிறங்க உள்ளன.

கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில், கொல்கத்தா அணிக்கு எதிரான 3 போட்டிகளிலும் சென்னை அணியே வெற்றி பெற்றிருக்கிறது. இரண்டு லீக் போட்டிகளிலும், இறுதிப்போட்டியிலும் சென்னை அணி வெற்றி கண்டுள்ளது.

இதனால், இம்முறை கடந்த ஆண்டு பதிவு செய்த தோல்விகளுக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் கொல்கத்தா அணி களமிறங்கும் என தெரிகிறது.

Advertisement