ஐ.பி.எல் முதல் போட்டி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் கேகேஆர் வெற்றி

502
Advertisement

மும்பையில் இன்று தொடங்கியது ஐ.பி.எல் 2022 ,வான்கடே மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் நடப்பு சம்பியனான சிஎஸ்கேவை வீழ்த்தியது கேகேஆர்

ஜடேஜா தலைமையில் சிஎஸ்கே அணியின் முதல் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்க்குக்கு மத்தியில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் பேட் செய்த சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 131 ரன்கள் எடுத்தது. எம்.எஸ்.டோனி 50 ரன்னும், உத்தப்பா 28 ரன்னும், ஜடேஜா 26 ரன்னும் எடுத்தனர்.

இறுதியாக சிஎஸ்கே அணி 20 ஒவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதையடுத்து 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய கேகேஆர் அணி சிறப்பாக விளையாடியது.

வெங்கடேஷ் ஐயர் 16 ரன்களிலும், நிதிஷ் ராணா 21 ரன்களில் அவுட்டாகினர். முதல் 2 விக்கெட்களையும் பிராவோ எடுத்தார். ராஹானே இந்த போட்டியில் அருமையாக விளையாடி 34 பந்துகளில் 44 ரன்கள் சேர்த்து அவுட்டானார்.

கொல்கத்தா அணி இறுதியாக 18.3 ஒவர்களில் 4 விக்கெட்களை மட்டும் இழந்து இலக்கை எட்டியது. கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 20 ரன்களுடன் கடைசி வரை களத்தில் இருந்தார்.

சென்னை அணி தரப்பில் பிராவோ 3 விக்கெட்களை வீழ்த்தினார். இதன்மூலம் நடப்பு ஐபிஎல் தொடரின் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது கொல்கத்தா.