“ஹாப்பி பர்த்டே டு யூ” பாடலை கேட்டு அப்செட் ஆன குழந்தை

24
Advertisement

பிறந்தநாள் கொண்டாட்டம் என்பது ஒவ்வொருவரின் மகிழ்ச்சியான தருணங்களில் ஒன்று.கொண்டாட்டத்தில் கூடியுள்ளவர் அனைவரும் பிறந்தநாள்க்குரியவரை வாழ்த்தி , பரிசுகளை அளிப்பார்கள், பிறந்தநாள் பாடலை பாடுவார்கள்.

இங்கும் அப்படி தான்,குழந்தை ஒன்றுக்கு அதன் பிறந்தநாளன்று அனைவரும் பிறந்தநாள் பாட்டை பாடுகிறார்கள்.பொதுவா இதுபோன்ற தருணத்தின் அனைவரும் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள், குறிப்பாக குழந்தைகள் அவர்களுக்கு பிடித்த முறையில் அந்த கொண்டாட்டம்   இருந்தால் கையில் பிடிக்கமுடியாது அந்த அளவு மகிழ்ச்சியடைவார்கள்.

ஆனால் அமிரா மே என்ற இந்த குழந்தையின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் , குழந்தையின் குடும்பத்தினர் அனைவரும் “ஹாப்பி பர்த்டே டு யூ..” என மகிழ்ச்சியாக பாடிக்கொண்டு இருக்க, அந்த குழந்தை அமிராவோ,  கன்னத்தில் கையை வைத்துக்கொண்டு எதிரியே உள்ளவர்களை ஏதோ ” என்ன பண்றானுங்க இவங்க” என்பது போல பார்த்துக்கொண்டு இருக்கிறது.குழந்தையின் இந்த முக பாவனை நெட்டிசன்களை சிரிக்கவைத்து வருகிறது.

Advertisement