அண்ணாமலை உடன் செல்ஃபி எடுத்த சிறுமி ட்விட்டரில் வைரல் !

263
Advertisement

திருமண நிகழ்ச்சி ஒன்றில் , திமுக தலைவர் ஸ்டாலின் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட தன் தந்தையின் செல்போனில் ஒரு சிறுமி பாஜக தலைவர் அண்ணாமலையுடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது

மக்களை ஈர்க்கும் வித்தியாசமான வீடியோகள் அல்லது புகைப்படம்கள் இணையத்தில் வைரலாகுவது வழக்கும் குறிப்பாக அரசியல் , சினிமா தொடர்புடைய செய்திகள் பகிரப்பட்ட சிலமணி நேரங்களில் வைரலாகிவிடும்.

அதுபோன்று ஒரு வீடியோ தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

தேர்தல் நெருங்கிவிட்டாலே போதும் அரசியல் காட்சிகள் தீயாய் வேலை செய்யா துடங்கி விடுவார்கள் .அது போன்ற நேரங்களில் ஒருவருக்கொருவர் விமர்சனம் செய்துகொள்வது வழக்கம். சில நேரங்களில் சூழல் கடுமையான தருணமாகவும் மாறக்கூடும் .

தமிழகத்தை பொறுத்தவரை , திமுகவும் பாஜகவும் ஒருவர்மீது ஒருவர் சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சித்துக்கொண்டு மீம்ஸ்களையும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிடுவது என்பது நாள்தோறும் நடைபெறுகிறது.

இந்நிலையில் , அரசியல் கட்சி தொண்டர்களை திரும்பிப் பார்க்க வைத்துள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வைராகி வருகிறது.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்ட கரூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் சிறுமி ஒருவர் அவருடைய தந்தையின் செல்போனில் அண்ணாமலையுடன் செல்பி எடுத்துள்ளார். அந்த போனின் பின்புறத்தில் தற்போதைய திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் புகைப்படம் பதிவாகி உள்ளது.

இதனை இரு கட்சி தொண்டர்களும் சமூக வலைத்தளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.